கனடாவில் தமிழ்நெறியில் முதன்முதலாகக் கொண்டாடப்பெற்ற ‘பாட்டருவி தமிழ்மாமணி’ க. உயிரவன் அவர்களின் மணிவிழா
Share
கனடா மொன்றியலில் 25-10-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கனடா தமிழாழிப் பேரவை, மற்றும் கனடா வாழ் நண்பர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழாழிப் பேரவைத் தலைவர், பாட்டருவி தமிழ்மாமணி க. உயிரவன், தவராணி இணை யர்களுக்கு தமிழ்நெறியில் மணிவிழாவை மிகச்சிறப்பா கொண்டாடினார்கள்.
மொன்றியல் வாழ் வித்துவான் திரு. லோகன் தமிழிசை முழங்க, ஐயன் திருவள்ளுவர்
சிலையுடன் திருக்குறள் நூல், செங்கோல், நாகமுடி, நிறைகும்பம், மணிவிழா விளக்குகள், அறுகம் தட்டு, தேங்காய்த்தட்டு, பழத்தட்டு, மாலைத்தட்டு, கணையாழித்தட்டு,பூத்தட்டு, பழத்தட்டு, பலகா ரத்தட்டு பண்பாட்டுத்தட்டு என ஒன்பது வகையான தட்டுடன் திரு க.உயிரவன்-தவராணி இணை யர்கள் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளை, தோழர்கள், தோழிகள் உறவினர்கள் புடை சூழ மணி நடை பயின்று வந்தனர். வரும்போது யேர்மன் தமிழ்எம் தொலைக்காட்சியின் இயக்குனர் முனைவர் சிவநேசன் அவர்கள் இசையமைத்த க.உயிரவன் இணையருக்கான வாழ்த்துப் பாடல் ஒலித்தது.
அதைத் தொடர்ந்து ஒட்டாவா முத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சிவசோதி, ரொரன்ரோ பாடகர்
நாதபாரதி கி. சுதாகரன் இருவரும் திருக்குறள் ஓதினார்கள். திருக்குறள் ஓதும் அதேவேளை யில் பாட்டருவி தமிழ்மாமணி க. உயிரவன்-தவராணி இணையர்கள் முதல் முறை திருவள்ளுவரை வலம் வந்து மணமாலை சூடி குங்குமம், சந்தனம் இட்டனர். இரண்டாம் முறை வலம் வந்து கணையாழி அணிந்தார்கள். மூன்றாம் முறை வலம் வந்து நாகமுடி சூடி செங்கோல் ஏந்தினா ர்கள். அப்போது சபையில் உள்ள அறிஞர்கள் கலைஞர்கள், பெரியோர்கள் தாமரைவீசி, பூக்கள் சொறிந்து, நெல்அறுகு தூவி, மணிவிழா தலைவன்தலைவியை வாழ்த்தினார்கள்.
மொன்றியல் வர்த்தகப் பெருமகனும் சமூகசேவையாளருமான ஏ.எம்.ஆர் மு.இராசகோபால் முதன்மை விருந்தினராகவும் திரு சி. மோகன்குமார் சிறப்பு விருந்தனராகவும் கலந்து கொண்டு உரையாற்றி னார்கள். மொன்றியல், ரொரன்ரோ, ஒட்டாவா, கோன்வால் ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள் சபையில் நிறைந்து இருந்து தமிழ்முறையில் நடந்த மணிவிழா கண்டு வியந்தார்கள். திரு க. உயிரவன் எழுதிய பாடல்களை இசைமணி கே.வி. செல்வன், பாடகர் கா.பவானந்தன், நாகபாரதி கி.சுதாகரன், ஆகியோர் பாடினா ர்கள்.
திரையிசைப் பாடகர் பாண்டிச்சேரி யமான் அவர்கள் எழுதி இசையமைத்து பாடிய உயிரவனுக்குரிய தமிழன்தமிழன் பாடலுக்கு மொன்றியில் மூத்த நடிகர் ப.குகானந்தம் நடித்து சிறப்பித்தார். பாடகர் தர்மராசனின் திரையிசை பாடலும், சுதா -பவானந்தன் குழுவினர் மற்றும் தமிழாழி அலைகள் குழுவினர்களின் நடனமும், விழாவை சிறப்பித்தன.
கனடா உதயனின் பத்திரிகையின் முதற்பக்கத்தில் க.உயிரவனின் மணிவிழா செய்தி பார்வையிட்ட தமிழ்நாடு, ஈழம், மலேசியா, மியன்மார்,அவுசுரேலியா, ஐரோப்பா நாடுகளில் இருந்து பலர் வாழ்த்துகளைத் தெரித்து மகிழ்ந்தனர்.
























