LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ் மொழிப்பற்று குறித்து எங்களுக்கு ஆளுனர் பாடம் எடுக்க வேண்டாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share

மக்களுக்கும், திமுக அரசுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை கெடுக்க சதி செய்வதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுனர் ஆர்.என்.ரவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசியதாவது: பா.ஜ.க. ஆட்சியில் தான் பஹல்காம் தாக்குதல், செங்கோட்டை தாக்குதல் நடந்துள்ளது. பயங்கரவாத தாக்குதலை தடுக்காத பா.ஜ.க. ஆட்சியை ஆளுனர் புகழ்ந்து பேசுகிறார். ஆளுனர் ஆர்.என்.ரவி திமிருடன் பேசுகிறார், அவரது திமிரை அடக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதால் ஆளுனருக்கு ஏன் வயிறு எரிகிறது. தமிழ் மொழிப்பற்று குறித்து எங்களுக்கு ஆளுனர் பாடம் எடுக்க வேண்டாம். தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதாக ஆளுனர் அவதூறு பரப்புகிறார். மக்களுக்கும், திமுக அரசுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை கெடுக்க சதி செய்கிறார்கள். ஆளுனர் ஆர்.என்.ரவி இப்படியே தொடர்ந்து பேசினால் தான் எங்களுக்கு வேலை ஈஸி என்றார்.