ஆஸ்திரேலியா: சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு
Share
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. எனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்த தடையானது வருகிற 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே சிறுவர்களின் சமூகவலைதள கணக்குகளை நீக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த தடையானது தங்களது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறி நோவா ஜோன்ஸ் (வயது 15) மற்றும் மேசி நெய்லேண்ட் (15) ஆகிய 2 சிறுவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.




















