LOADING

Type to search

உலக அரசியல்

வடகொரிய விமானப்படையின் 80-வது ஆண்டு விழா – வான்சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த அதிபர் கிம்

Share

வடகொரிய விமானப்படையின் 80-வது ஆண்டு விழா பிரம்மாண்டமான முறையில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அந்நாட்டின் அணுஆயுத போர் திறனை வெளிக்காட்டும் வகையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து விமானப்படையின் வான்சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வடகொரிய அதிபர் கிம், தனது மகளுடன் வருகை தந்தார். பின்னர் அவர்கள் வான்சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். வடகொரியாவின் அணுஆயுத பாதுகாப்பிற்கு விமானப்படை முக்கிய பங்காற்றுகிறது என்று தெரிவித்த அதிபர் கிம், அணுஆயுத போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் வகையில் விமானப்படைக்கு நவீன சக்திவாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.