LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவனுக்கும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலருக்குமிடையில் சந்திப்பு!

Share

பு.கஜிந்தன்

வடமராட்சி வடக்கு பிரதேச அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலானது வடமராட்சி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலமையிலான குழுவினருக்கும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந.திருலிங்கநாதனுக்கும் இடையில் 3ம் திகதி புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில், புயலுக்கு பின்னர் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், மக்களின் பாதுகாப்பு, அவசர தேவைகள், நிவாரணப் பொருட்கள் விநியோகம், மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

இச் சந்திப்பில தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் ஆகியோர் கலந்துகொண்டனர்

இதேவேளை கற்கோவளம் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் இராணுவத்தினர், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினர், பருத்தித்துறை பிரதேச சபையினர் ஆகியோர் இணைந்து சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தொற்று நீக்கிகளும் விசிறப்பட்டன.