14 ஆம் ஆண்டு நினைவஞ்சலி | மார்க்கண்டு உதயகுமார் | உதயகுமார் வசந்திமாலா
Share
மார்க்கண்டு உதயகுமார்
(புத்தூர் உபதபால் ஊழியர்)
தோற்றம்
24.12.1956
உதயகுமார் வசந்திமாலா
(நீர்வேலி மேற்கு, 4ஆம் மைல், இராஜ வீதி, நீர்வேலி)
தோற்றம்
08.02.1966
இறைவன் அடியில் : 08.12.2011
மறக்க முடியுமோ?
ஆறாத வடுவாய் எம்மனதில்…………
பகைவர்களின் அசுரத்தனம் தாண்டவமாடி
பதின்நான்கு ஆண்டுகள் பறந்தது.
உறவெனும் வேடம்பூண்டு வேரறுத்தவர்கள்
ஊரறிய இறைவனால் பழிதீர்த்தல் கண்முன்னே நடந்தாயிற்று.
இரத்த சொந்தங்களே மண்ணாசையால் விசம்விதைக்க
இரக்கமற்று செய்யப்பட்ட கொடூர செயல் அது.
ஆசையாய் பெற்றுவளர்த்த அம்மாவுடன்
அரவணைத்து பண்பூட்டிய அப்பாவையும் சேர்த்து.
நொடிப்பொழுதில் கண்ணிமைத்து மூடமுன்பு
நோகாமல் இருந்து வஞ்சம் தீர்த்தீர்கள்.
வசந்தா எனும் மலரை குமர்ப்பிள்ளை கண்முன்னே
குமார் எனும் குணமான பண்பாளனையும் வேட்டையாடினீர்கள்.
அடேய்! படுபாதகர்களே!! இத்தனையும் சொல்லும் பாடம்
ஆண்டவன் இருக்கிறான். காத்திருந்து கதைமுடிப்பான்.
பாவிகளால் காவுகொள்ளப்பட்டாலும் போற்றுதலுக்குரியவர்கள்
பெற்றோரே உங்கள் ஆத்ம சாந்திக்காக உளமாற வேண்டுகிறோம்.
என்றும் உங்கள் நினைவிலேயே வாழும்…
ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி!
தொடர்புகளுக்கு: +1(289) – 952 – 3775
பிள்ளைகள்:
செந்தூரன் (பிரான்ஸ்), குகதீபன் (கனடா),
சங்கீதன் (கனடா), கோபிகா (கனடா)




















