LOADING

Type to search

இந்திய அரசியல்

மத்திய அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Share

அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

     நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”நேஷனல் ஹெரால்டு வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து மத்திய பாஜக அரசு, மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகிறது. இதனை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லாமல், இதுபோன்ற வழக்குகள் அரசியல் எதிரிகளை துன்புறுத்துவதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மட்டுமே போடப்படுகின்றன. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதால், ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் பழிவாங்கும் அணுகுமுறையால் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மைக்கு களங்கம் ஏற்படுகிறது. அத்துடன், அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.