LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பில் தேடப்பட்ட காரணத்தால் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி திரும்பி வந்த பிள்ளையானின் சகாவை காலையில் கைது செய்து மாலையில் விடுவித்த சிஐடி

Share

(கனகராசா சரவணன்)

சிஜடி யினரால் தேடப்பட்டு வந்த நிலையில் வெளிநாட்டிற்கு நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து விட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாளின் பின்னர் வீட்டில் வைத்து 17ம் திகதி புதன்கிழமை காலையில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்ற பிள்ளையானின் சகாவான அஜித் என்பவரை மாலையில் விசாரணையின் பின்னர் சிஜடி யினர் விடுவித்துள்ளனர்

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து ஏப்பிரல் 8ம் திகதி கைது செய்தனர்

இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானிடம் மேற்கொண்டுவரும் விசாரணையின் அடிப்படையில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பிள்ளையானின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது

இதனடிப்படையில் பிள்ளையான் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரை சம்பவ தினமான நேற்று காலையில் அவரது கொண்டையன் கேணியில் உள்ள வீட்டிற்கு கொழும்பில் இருந்து சென்ற சிஐடியினர் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்று விசாரணையின் பின்னர் மாலையில் விடுவித்துள்ளனர்.