LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் வன்முறைக் கும்பல்கள் அட்டகாசம் – பல உடைமைகள் சேதம்!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் வன்முறைக் கும்பல்கள் அட்டகாசம் செய்து வீட்டின் மீதும் வாகனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தியதால் பல உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் 21ம் திகதிஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கைக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வாள்கள், கத்தி, கற்களுடன் வருகை தந்த ஒரு குழுவினால் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.உழவு இயந்திரம், மற்றுசொகுசு வாகனம் வீட்டின் பொருட்கள் கதவுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த வன்முறைக் குழுவினர் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட நாட்களாக குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் ஆரம்பித்துள்ளதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலருக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் அதிகளவான முறைப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் பொலிசார் இவர்களை கைது செய்ய தயங்குவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.