பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய யாழ்ப்பாண. இளைஞர்களின் முன்மாதிரியான செயலால் குவியும் பாராட்டுக்கள்!
Share
பு.கஜிந்தன்
அண்மையில் இடம்பெற்ற டித்வா புயலின் கோர தாண்டவத்தால் மலையக மக்கள் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இன்றுவரை அவர்களது இழப்புகள் முழுமையாக ஈடு செய்யப்படவில்லை.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக, யாழ்ப்பாண. இளைஞர்களால் மலையக மக்களுக்கு பெருவாரியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
15 இலட்சத்து 60ஆயிரம் ரூபா நிதியில் , ஆடைகள், உலருணவுப் பொதிகள் என்பன 246 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
யாழ். இளைஞர்களின் இந்த முன்மாதிரியான செயலை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது




















