LOADING

Type to search

கனடா அரசியல்

ரொறன்ரோ ‘தாள லயா’ இசைக் கல்விக் கூடம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அதன் 21வது ஆண்டு நிறைவு விழா!

Share

கனடா ரொறன்ரோ நகரில் நீண்ட காலமாக இயங்கிவரும் ஆசிரியர் ரவி செல்லையா அவர்களின் ‘தாள லயா’ இசைக் கல்விக் கூடம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அதன் 21வது ஆண்டு நிறைவு விழா கடந்த 27-12-2025 அன்று சனிக்கிழமையன்று மாலை செந்தாமரை விழா மண்டபத்தில் நடைபெற்றது.

பல இசையாசிரியர்கள், இசைக் கலைஞர்கள், பெற்றோர்கள், இசை பயிலும் மாணவ மாணவிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் மண்டபத்தில் கூடியிருந்தார்கள்.

மேற்படி ஆண்டு விழாவிற்கு தமது ஆதரவை வழங்கியிருந்த ஸ்காபுறோ ‘விஜயா யுவல்லறி நகை மாளிகையின் உரிமையாளர்களுக்கு ‘தாள லயா’ இசைக் கல்விக் கூடத்தின் ஆசிரியர் ரவி செல்லையா மற்றும் பெற்றோர் ஆகியோர் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

நிறுவனத்தின் ஆசிரியரும் இசைக் கலைஞருமான ரவி செல்லையா அவர்கள் தபேலா மற்றும் கீபோர்ட் ஆகிய இசைக் கருவிகளை வாசிப்பதில் அனுபவமும் ஆற்றலும் கொண்டவர். அத்துடன் சிறந்த பாடகரும் கூட.

அன்றை விழாவிற்கு பிரதம விருந்தினராக பாடகரும் பொறியியலாளருமான இசைப் பிரியன் -கனகராஜா அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார். வாழ்த்துரைகளை வழங்க வரசித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் மற்றும் ‘உதயன்’ பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் ஆகியோர் அழைக்கப்பெற்றிருந்தனர்.

மேற்படி ‘தாள லயா’ இசைக் கல்விக் கூடம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அதன் 21வது இசை மற்றும் இசைக் கருவிகள் தொடர்பாக பயின்று வரும் மாணவ மாணவிகளின் திறன்களை அறியும் வகையில் தொடர்ச்சியாக மேடையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதில் பல பாடக பாடகிகளுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பெற்றமை பாராட்டுக்குரியதாகும்.

அன்றை நிகழ்ச்சியில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜேய் தணிகாசலம் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ்களை ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் மற்றும் இசைக் கலைஞர் நர்த்தனன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு வழங்கி கௌரவித்தனர்.

மொத்தத்தில் நல்லதோர் இசைச் சமர்ப்பணம் ஒன்றை கண்டும் கேட்டும் ரசிக்கக் கூடியவகையில் தனது நிறுவனத்தின் 21வது ஆண்டு விழாவை ஏற்பாடு செய்த இசையாசிரியரும் பாடகருமான ரவி செல்லையா அவர்களையும் குழுவினரையும் அனைவரும் பாராட்டிச் சென்றனர்.

செயதி: சத்தியன்- படங்கள்-ஜரிஏ வீடியோ கெங்கா