யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் முயற்சியா?
Share
யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் முயற்சியா? என்ற சந்தேகம் அஙகு எழுந்துள்ளது. இந்த வியடம் தொடர்பாக உயர் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அவர்களது அஞலுவலகத்திற்கும் முறையிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியில் ICT பாடநெறிக்கான Viva பரீட்சைக்கு வருகின்ற மதிப்பீட்டு உத்தியோகத்தர்களுக்கான (உணவு, தங்குமிடம்.போக்குவரத்து) அனைததுக்கும் என பரீட்சை எழுதும் மாணவர்களிடம் வாட்ஸாப்பில் பணம் சேகரிக்கும் அறிவுறுத்தல்கள் சில விரிவுரையாளர்களினால் விடுக்கப்பட்டுள்ளதாக இந்த சந்தேகம் தோன்றியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த தொழில்நுட்பக் கல்லூரியில் எதிர்வரும் 12- 13-ம் திகதிகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கான வாய்மொழி மூல பரீட்சைகள் இடம்பெற உள்ளன.
இதற்காக கொழும்பிலிருந்து வருகைதரும் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்காக குறித்த நிதி சேகரிப்பு விரிவுரையாளர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இடம்பெறுவதாக மாணவர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
பரீட்சை நடாத்துவதற்கு வரும் உத்தியோத்தர்களுக்கு அரசாங்கம் தங்குமிடம் போக்குவரத்து என்பவற்றை வழங்குகின்ற போதும் மாணவர்களிடம் பணத்தை கேட்பது எவ்விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.
குறித்த விடயம் தொடர்பில் தொழில் நுட்பக் கல்லூரியில் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறான விடயம் ஒன்று whatsapp ஊடாக இடம்பெறுவதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும் மாணவர்கள் வரும் நிதி வழங்க வேண்டிய தேவை இல்லை என அறிவுறுத்தல் வழங்கியதாக தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமர சூரியாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .




















