ரொறன்ரோ மாநகரில் 17ம் ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் ஆரம்ப விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாநகரசபை உறுப்பினர் நீதன் சண்முகராஜா !
Share
ரொறன்ரோ மாநகரில் தமிழ் மரபுத் திங்கள் என்னும் உன்னதமான சிந்தனையை ஏற்படுத்தியவர்களுள் முக்கியமானவர் எனக் கருதப்படும் நீதன் சண்முகராஜா அவர்கள் 17ம் ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் ஆரம்ப விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
தற்போது ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினனராகச் சேவையாற்றும் நீதன் சண்முகராஜா அவர்கள் தனது ‘தமிழ் மரபுத் திங்கள் செயலவை’ என்னும் அமைப்பின் சார்பிலும் ‘தமிழ் குடிசார் நடவடிக்கை நிலையம்’
(CANADIAN CENTRE FOR TAMIL CIVIC ACTION )என்னும் அமைப்போடு இணைந்து கடந்த 06-01-2026 செவ்வாய்க்கிழமையன்று குயின் பெலஸ் விழா மண்டபத்தில் இந்த ஆரம்ப விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
அழைக்கப்பெற்ற பல அரசியல் பிரமுகர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலை இலக்கியம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகள் சார்ந்த பெருமக்கள் மண்டபத்தை நிரப்பிய வண்ணம் மேற்படி ஆரம்ப விழா தொடக்கம் முதல் இறுதி வரை கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் என தமிழ்ப் பண்பாட்டுக் கோலங்கள் அலங்கரித்த இனிய விழாவாக நிறைவு பெற்றது.
இந்த ஆரம்ப விழா ஏற்பாடுகளில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் இயங்கிவரும் பல தமிழர் அமைப்புக்கள் பங்குபற்றி தங்கள் ஆதேரவை வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-படங்கள் மற்றும் தகவல் : சத்தியன்























