LOADING

Type to search

சினிமா

பராசக்தி படத்தில் நடித்தது வாழ்நாள் பெருமை – சிவகார்த்திகேயன்

Share

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ’பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் எதிர்மறையான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். உடன் அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய இசையில் 100ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது. 1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது. இந்தசூழலில் படம் வசூலிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. சென்னையில் பராசக்தி படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் கூறியதாவது: நடிப்பதற்கு சவாலான கதாப்பாத்திரம் என்பதால் பராசக்தியைதேர்வு செய்தேன். பரசாக்தி படத்தில் நடித்தது எனது வாழ்நாள் பெருமை. சினிமாவிற்கு ஏற்பட்ட சில மாற்றங்கள் செய்தே படம் எடுக்கப்பட்டது” என்றார்.