Toronto Mayor Her Worship Olivia Chow attends ‘Thai Pongal;’ | ‘Celebrations at Scarborough Kanthasamy Hindu Temple.
Share
கனடா கந்தசுவாமி ஆலய பொங்கல்விழாவில் கலந்து கொண்ட ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா சோ
கனடாவில் பொங்கல் தினமான 14-01-2026 புதன்கிழமையன்று கனடா கந்தசுவாமி ஆலய நிர்வாக சபையினர் ஏற்பாடு செய்திருந்த பொங்கல்விழா தொடர்பான விசேட பூசை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்ட ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா சோ அங்கு நிர்வாக சபையின் தலைவர் முத்துராஜலிங்;கம் (முத்து) மற்றும் தனபாலசிங்கம் போன்ற முக்கிய உறுப்பினர்களால் வரவேற்கப்பெற்றார்.

ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா சோ அவர்களோடு தமிழ் பேசும் நகரசபை உறுப்பினர்களாக நீதன் சண்முகராஜா மற்றும் பார்த்தி கந்தவேள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
அங்கு இவர்கள் அனைவரும் எமது தமிழர் கலாச்சார உடைகளோடு வந்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அங்கு வாழ்த்துரை வழங்கிய ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா சோ அவர்களின் ஈழத்தமிழ்கள் கனடிய தேசத்திலும் அதன் பிரதான நகரமாக விளங்குகின்ற ரொறன்ரோ மாநகரத்திலும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை அடைந்துள்ளார்கள் என்பதைக் காணும் போது தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்




















