சட்டசபையில் விபி-ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Share
சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு காலை தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்து இருந்தார். இந்நிலையில் மத்திய அரசின் விபி-ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு பாகுபாடின்றி திறம்பட செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் மீது பாரபட்சத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமரின் கிராம சாலை திட்டத்தில் ரூ.500 கோடி நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. கிராம மக்களின் வாழ்வாதாரத்தை வேரறுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. திட்டங்களை செயல்படுத்தும்போது மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதை கொள்கையாக கொண்டிருக்கிறது. விபி-ஜி ராம் ஜி திட்டத்தின்படி 40 சதவீதம் பங்களிப்பு என்ற அறிவிப்பால் மாநிலத்தின் நிதி சுமை மேலும் அதிகரிக்கும். மக்களின் தேவை அடிப்படையில் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய சட்டம் கொண்டு வரப்படவில்லை. 100 நாள் வேலை திட்டமானது மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்தில புதிய நடைமுறையை கைவிட வேண்டும். பழைய நடைமுறையே தொடர வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு நிலை நாட்டப்பட வேண்டும் என்று கூறினார்.




















