கனடிய அரசின் உயர்மட்ட அமைச்சர்களும் இலங்கை மற்றும் இந்திய தமிழ்க் குடும்பங்களின் வம்சாவழிகளுமான இருவர் கலந்து சிறப்பித்த ஆளும் கட்சியின் வருடாந்த பொங்கல்விழா
Share
வருடா வருடம் தவறாது நடைபெறும் பொங்கல் விழா மற்றும் தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம் ஆகியவற்றை கனடாவின் ஆளும் கட்சிக் குழு நடத்துவது முக்கிய நிகழ்வாக அமையும்.

அந்தவகையில், கனடிய அரசின் உயர்மட்ட அமைச்சர்களும் இலங்கை மற்றும் இந்திய தமிழ்க் குடும்பங்களின் வம்சாவழிகளுமான முறையே. கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றின் அமைச்சர்சகளான ஹரி ஆனந்தசங்கரி மற்றும் அனிற்றா ஆனந்த் அத்துடன் மற்றுமொரு தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா ஆனந்த் ஆகியோரும் பத்துக்கு மேற்பட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்த ஆளும் கட்சியின் வருடாந்த பொங்கல்விழா ஒட்டாவா மாநகரில் 27-01-2026 அன்று செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.

மேற்படி விழாவிற்கு அழைக்கப்பெற்றவர்களாக மொன்றியால்-ஒட்டாவா- ரொறன்ரோ -கோன்வொல் ஆகிய நகர் வாழ் தமிழ் மக்களும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகளும் அத்துடன் முக்கிய நிகழ்வாக எமது தாயகத்திலிருந்து தற்பொழுது கனடாவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்களான ராப் பாடகர் வாகீசன் மற்றும் அட்விக்- கிசோன் ஆகியோர் வழங்கிய பாடல் நிகழ்ச்சியும் சபையோரைக் கவர்ந்தன.

மேற்படி நிகழ்வில் கனடா உதயன் பத்திரிகை சார்பாக நண்பர்கள் குழு, அதன் பிரதம ஆசிரியரோடு சென்றிருந்தது.
இந்த நிகழ்வானது தமிழர் பண்பாட்டையும் மொழியின் முக்கியத்துவத்தையும் பறைசாற்று கின்ற ஒரு முக்கிய நிகழ்வாக அனைவரையும் பெருமை கொள்ளச் செய்தது. என்றால் அது மிகையாகாது
“பெருமை கொள் தமிழா!”
படங்களும் :சத்தியன்
Uthayannews LJI Journalist Ganesh




















