அவலத்தை அனுபவத்தவர்கள் அவலத்தின் வலி உணர்ந்து இலங்கை மக்களுக்கு அனுப்பிவைத்த நிவாரணப் பொருட்கள்!.
Share
டித்வா புயல் காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஈழ அகதிகள் இரண்டு கொள்கலன் நிவாரணப் பொருள்களையும், நிதி உதவியையும் வழங்கியுள்ளனர்.
இலங்கை மக்களுடன் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கையர்கள், டித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, இரண்டு கொள்கலன்களில் அத்தியாவசிய நிவாரணப் பொருள்களையும், கணிசமான நிதி உதவியையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்த நிவாரண உதவிகள், மீள்குடியேற்றப்பட்ட இலங்கை சமூகத்தின் பிரதிநிதிகளால் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாகக் கையளிக்கப்பட்டது.
இந்த நிவாரண பொருள்கள் யாவும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.
ஒவ்வொன்றும் 20 அடி கொள் அளவுடைய நிவாரணப் பொருள் உதவிகளுக்கு மேலதிகமாக, மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்களாக முன்வந்து, ஒருங்கிணைந்த முயற்சிகள் வாயினால் சேகரிக்கப்பட்ட 12 லட்சத்து 33 ஆயிரத்து 604 ரூபா இந்திய நாணய நிதிப் பங்களிப்பையும் வழங்கியுள்ளனர். இது இலங்கை நாயணத்தில் சுமார் 40 லட்சம் ரூபாவாகும்.
நிவாரண பொருள்கள் கையளிக்கப்பட்டபோது, துணைத் தூதரகத்தில் பெருமளவிலான இலங்கை சமூகப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், தங்களின் நிவாரண உதவிகளை இலங்கைக்கு ஒருங்கிணைத்து அனுப்புவதற்கு எடுத்த முயற்சிகளுக்காக துணைத் தூதரகத்திற்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இந்தக் கடினமான காலகட்டத்தில் வெள்ளச் சூழ்நிலையைச் சமாளிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகளுக்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்த உதவிகள், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முறையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் சென்றடையும் என்பதில் இலங்கை அரசாங்கத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60 ஆயிரம் இலங்கையர்கள் வசிக்கின்றனர்.
மேலும் 40 ஆயிரம் மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள் முகாம்களுக்கு வெளியே காவல்துறையில் பதிவு செய்துகொண்டு வாழ்கின்றனர்.
இடம் பெயர்வதால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், இந்தச் சமூகங்கள் இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூட்டாக நிவாரண உதவிகளைத் திரட்டிய செயலானது, அனைவரின் மனதினை நெகிழச் செய்துள்ள




















