LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த ஈரான் அதிபர்

Share

ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஏற்றவகையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் நோக்கி நகரத்தொடங்கின. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் துருக்கி சென்றுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், மத்தியஸ்தரராக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதால் பதற்ற நிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.