தையல் கலையில் 15 நிமிடங்களில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண மண்ணின் இளம் பெண் ஜெயந்தன் மேரி சுலக்சனா !
Share
15 நிமிடங்களில் திறமைகளை வெளிக்காட்டிய இலங்கையை சேர்ந்த மகளிருக்குத் திறமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த இளம் பெண்ணான ஜெயந்தன் மேரி சுலக்சனா என்பவர் வழங்கப்பட்ட சிறப்பு தையல் வேலைப்பாடு ஒன்றைப் பதினைந்து நிமிடங்களுக்குள் வெற்றிகரமாகச் செய்து முடித்து உலக சாதனை படைத்ததுடன், உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார்.
அவருக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.




















