LOADING

Type to search

இந்திய அரசியல்

விழுப்புரத்தில் ரூ.688.48 கோடி செலவிலான திட்டப்பணிகள் – முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

Share

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.688.48 கோடி செலவிலான 199 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 24 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,879 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 390 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவிலான 199 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 254 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 24 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 13,879 பயனாளிகளுக்கு 43 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 49 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்கள், வட்டார பொது சுகாதார கட்டிடங்கள், புதிய நியாய விலைக் கடைகள், இருப்பறையுடன் கூடிய சமையல் அறைகள், நாடக மேடைகள், கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிக் கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கணினி வகுப்பறைகள், உணவு தானியக் கிடங்குகள், சாலையை வலுப்படுத்தும் பணிகள், வட்டார சுகாதார வள மையக் கட்டிடம் உள்ளிட்ட 163 முடிவுற்றப் பணிகள்; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திண்டிவனம் நகராட்சி, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 27 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம்; பி.என்.தோப்பு, காகுப்பம், சாலாமேடு ஆகிய இடங்களில் உள்ள நடுநலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 2 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைகள்; கோட்டக்குப்பம் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் நான்கு கூடுதல் வகுப்பறைகள், ரஹமத் நகரில் 32 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா, செஞ்சி, அரகண்டநல்லூர், வளவனுர் ஆகிய பேரூராட்சிகளில் 57 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டப் பணிகள், செஞ்சி பேரூராட்சி – சக்கராபுரம் இறக்கம் 2 மற்றும் 3, பெரியண்ணன் தெருவிலிருந்து பி.ஏரி வழித்தடம் ஆகிய இடங்களில் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் பாலங்கள்; பள்ளிக் கல்வித் துறை சார்பில், கோலியனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 3 கோடியே 44 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் 12 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டிடம், மரகதபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் 8 வகுப்பறைகள், கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள், கண்டமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 3 கோடியே 76 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் 16 வகுப்பறைகள், கோவடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் 8 வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள்; நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், வெள்ளிமேடுபேட்டை பாண்டி (வழி) மைலம் சாலையில் 32 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி உறுதிபடுத்தப்பட்ட நான்கு வழித்தடம் மற்றும் கல்வெர்ட், மையத்தடுப்பான், மேம்படுத்தப்பட்ட சந்திப்பு, தடுப்புச் சுவர் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகள், கொங்கராயனூர் – பையூர் காலனி சாலையில் தென்பெண்ணை ஆறு, சாத்தனூர் – ஆசூர் – மேலகொந்தை சாலை, வளத்தி-அவலுர்பேட்டை சாலைகள் ஆகிய இடங்களில் 38 கோடியே 83 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலங்கள்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திண்டிவனத்தில் 60 கோடி ரூபாய் செலவில் தலைமை மருத்துவமனைக் கட்டிடம் மற்றும் 6 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் தாய் சேய் நலப் பிரிவு, செஞ்சி அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் தாய் சேய் நலப் பிரிவு;

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், விக்கிரவாண்டியில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் மற்றும் 75 லட்சம் ரூபாய் செலவில் உழவர் சந்தை; கூட்டுறவுத் துறை சார்பில், திண்டிவனம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு 13 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் எண்ணெய் உற்பத்தி அலகுகள், 15 லட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட வளவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அனுமந்தை மற்றும் அரகண்டநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 70 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டிடங்கள், காணை மற்றும் நேமூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 65 லட்சம் ரூபாய் செலவில் புதிய பல்நோக்கு சேவை மையக் கட்டிடங்கள்; குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், திண்டிவனம் சிட்கோ மருந்தியல் பெருங்குழுமத்தில் 87 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள்; என மொத்தம், 390 கோடியே 44 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 199 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.