LOADING

Type to search

இலங்கை அரசியல் உலக அரசியல்

இங்கிலாந்தின் லண்டனில் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் சுதந்திர தின எதிர்ப்பாக ‘கறுப்பு தின’ போராட்டம்!

Share

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து 4ம் திகதி அன்றையதினம் இலங்கையின் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் உறவுகளால் இங்கிலாந்தின் லண்டனிலும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் பேரணியாக பாராளுமன்றம் நோக்கி நகர்ந்தது.

இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை என தெரிவித்தும், தமிழ் தேசிய கொடியான ‘புலிக் கொடியை’ தாங்கியவாறு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.