LOADING

Type to search

சினிமா

ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரவி மோகனின் 34-வது படம் ‘கராத்தே பாபு’. ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ள இப்படத்தை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், சக்தி வாசுதேவன், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜ ராணி பாண்டியன், சந்தீப் ராஜ், சிந்துப்ரியா, அஜித் கோஷ், அரவிந்த், கல்கி ராஜா, ஸ்ரீ தன்யா, ஆனந்தி, சாம் ஆண்டர்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அண்மையில் வெளியான ‘கராத்தே பாபு’ படத்தின் முன்னோட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வரும் கோடைக்காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.