LOADING

Type to search

இந்திய அரசியல்

கனடா பள்ளியில் துப்பாக்கி சூடு… பிரதமர் மோடி இரங்கல்

Share

கனடா நாட்டின் பள்ளியில் துப்பக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். பள்ளி வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கனடாவி் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “கனடாவில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த ஆழ்ந்த துக்க தருணத்தில் கனடா மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது,” என குறிப்பிட்டுள்ளார்.