LOADING

Type to search

கனடா அரசியல்

மொன்றியால் தொழிலதிபர் AMR முத்தையா ராஜ்கோபால் ‘ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையம்’ நிதியத்திற்கு வழங்கிய 100,040.00 டாலர் காசோலையை சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் நேரடியாகப் பெற்றுக்கொண்டார்

Share

கனடா- ஸ்காபுறோ நகரில் அமையவுள்ள ‘தமிழ்ச் சமூக மையம்’ நிதிசேகரிப்பு முயற்சிகளில் சில குழுக்களாக பலர் இயங்கிவந்தாலும் தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான சாந்தா பஞ்சலிங்கம் அவர்களின் பங்களிப்பு என்பது தனித்துவமானது என்பதை தமிழ்க் கனடியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

அவரது முயற்சிகளின் விளைவாகவும் அவரோடு இணைந்து அவ்வப்போது செயற்படுகின்ற நண்பர்கள் சிலரின் உந்துதலோடும் மொன்றியால் மாநகர் வாழ் தொழிலதிபர்களில் ஒருவரான முத்தையா ராஜ்கோபால் அவர்கள் நிதியத்திற்கு ஒரு இலட்சத்து நாற்பது கனடிய டாலர்கள் ( 100,040.00 ;டாலர்கள் ) வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்த வகையில் ரொறன்ரோவிருந்து சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் மொன்றியால் மாநகர் சென்று மேற்படி முழுத்தொகைக்கான காசோலையை AMR முத்தையா ராஜ்கோபால் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்

.

A.M.R Cash & Carry நிறுவனத்தின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற காகோலை கையளிப்பு வைபவத்தில் AMR Cash & Carry ஸ்தாபனத்தின் பங்காளரும் முத்தையா ராஜ்கோபால் அவர்களின் புதல்வருமான ராஜன் அவர்களும் மொன்றியால் வாழ் சமூக மற்றும் மொழி. சமயம் சார்ந்த செயற்பாட்டாளர் வாகீசன் நடராஜா மற்றும் ரொறன்ரொவிருந்து சாந்தா பஞ்சலிங்கம் அவர்களோடு சென்றிருந்த ஊடகவியலாளர்களும் தமிழ்ச் சமூக மையத்திற்கு தங்கள் நிிதிப் பங்களிப்பு வழங்கியவர்களுமான ‘யுகம் வானொலி’ கணபதி ரவீந்திரன் மற்றும்’ கனடா உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் நிற்பதைக் காணலாம். AMR முத்தையா ராஜ்கோபால் அவர்கள் வழங்கிய இந்த தொகையானது மொன்றியால் மாநகர அன்பர்கள் வழங்கிய பங்களிப்புக்களில் மிக அதிகமானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.