LOADING

Type to search

சினிமா

பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள் – இயக்குநர் சேரன்

Share

நடிகர் ஆரியின் 4த் ப்ளோர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சேரன், பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுவதாக தெரிவித்தார்.

இது குறித்து இயக்குநர் சேரன் பேசும் போது, “திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள்ள வந்து போகும். “திருப்பூர் புரொடியூசர்ஸ்” உடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தது. அந்த வகையில், இந்த படத்தை தயாரித்து, அதை வெளியீடு வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே ஒரு பெரிய விஷயம். அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம். இந்தப் படத்தைப் பற்றி பேசும்போது, முதல் இம்ப்ரஷன் என்றால் அது நிச்சயமாக டைட்டில் டிசைன் தான். 4த் ஃப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பிலே இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. படத்தின் மற்ற எல்லா அம்சங்கள் பார்த்தால், எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது. இது இன்றைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது. இந்தப் படக்குழுவில் இருக்கும் பலரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். ஆரி என் நண்பர், என் மாணவர், என் படத்தில் நடித்தவர். எந்த விதமான பின்புல ஆதரவுமில்லாமல், அவருடைய உழைப்பை மட்டுமே நம்பி இங்கு நிற்கும் மனிதர். அந்த வகையில், இந்தப் படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும், ஒரு நம்பிக்கையாகவும் அமைய வேண்டும், வாழ்த்துக்கள்,” என்றார்.