LOADING

Type to search

சினிமா

லோகா 2 படப்பிடிப்பு பதிவேற்றம் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன்

Share

மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான ‘கள்ளியங்காடு நீலி’ ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. இதுவே இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நஸ்லேன், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்திருந்தனர். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்தது. கடந்த ஆண்டு வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிகம் வசூல் செய்த படமாக மாறியது. இந்த நிலையில், லோகா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் புதிய பதிவேற்றம் கொடுத்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கல்யாணி பிரியர்தர்ஷன் லோகா 2 குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், “லோகா 2 படத்தின் கதை வேலைகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று நம்புகிறேன். லோகா 2 படத்திலும் நான் படத்தில் நடிக்கிறேன்,” என்று தெரிவித்தார்.