LOADING

Type to search

சினிமா

சரத்குமாரின் “ஆழி” படத்தின் “வாடா அன்பு தோழா” பாடல் வெளியீடு

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரவேற்பை பெற்ற இவர் ‘ஆழி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார். 888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜாஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்.இதில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி மற்றும் ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் ரசிகர்களின் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், ‘ஆழி’ திரைப்படத்தின் ‘வாடா அன்பு தோழா’ காணொளி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் செந்தமிழ் வரிகளில் ஜாஸ்ஸி கிப்ட் இசையில் ஜாஸ்ஸி கிப்ட், பத்ரா ராஜின் பாடியுள்ளனர். இத்திரைப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.