LOADING

Type to search

உலக அரசியல்

சிலி நாட்டில் எரிவாயு ஏற்றி சென்ற லோரி கவிழ்ந்து விபத்து – 4 பேர் மரணம்

Share

சிலி நாட்டு தலைநகர் சாண்டியாகோவில் ரென்கா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லோரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லோரி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் லோரி வெடித்து சிதறியது. இதனால் நெடுஞ்சாலையில் பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதும் மிகப்பெரிய புகை மண்டலம் எழும்பியது. இந்த விபத்தில் லோரி ஓட்டுநர் உள்பட 4 பேர் பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. சில இடிபாடுகள் அங்குள்ள கட்டிடங்கள் மீது விழுந்தன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.