கனடாவின் அல்பர்ட்டா மாகாண பிரிவு தொடர்பான தீவிரம்!
Share
கனேடியர்களிடையே நடந்த கருத்துக்கணிப்பொன்று எதைக் காட்டுகின்றது?

கனடாவில் இரண்டு மாகாணங்கள், கனடாவை விட்டு பிரிந்து போவதற்காக ஒரு பொது வாக்கெடுப்பு (Referendum) அல்லது சுயாதீன பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டிய முயற்சிகளை முன்னய காலங்களில் மேற்கொண்டுள்ளன. அதில் முதலாவதாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் கியூபெக் மாகாணம் (Quebec Province) முயற்சித்தது. அப்பொழுது மக்கள் ‘வேண்டாம்’ என்று கருத்து தெரிவித்ததால் அதுவும் சொற்ப வேறுபாட்டில் அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்பிறகு, 2025 ஆம் ஆண்டு கனடாவில் மிகப்பெரிய பொருளாதார சக்தி வாய்ந்த,கனடாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய மாகாணமாக விளங்கும் அல்பர்ட்டாவின் பிரீமியர் டேனியல் சிமித் (Danielle Smith), மே மாதம் 2025ல் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
அல்பர்ட்டா (Alberta) கனடாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும், கனடாவில் அல்பேட்டா இருபதால் போதுமான பயன் கிடைப்பதில்லை என அவர் கருத்து தெரிவித்துள்ளார். அல்பர்ட்டாவின் வளங்கள், குறிப்பாக பெற்றோலியம் மற்றும் கனிம வளங்கள் தொடர்பான உற்பத்திகள்,அந்த மாகாணத்தின் கட்டுப்பாட்டில் தான் கையாளப்படுகின்றன. இதனால், கனடாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான தாக்கத்தை செலுத்தும் மாகாணமாக அல்பர்ட்டா திகழ்கிறது.
டேனியல் சிமித் இதன் குறைபாட்டை எடுத்துக்காட்டி கூறியதாவது அல்பர்ட்டாவின் பெரும் வருவாய் நிதி மத்திய அரசிற்கு செலுத்தப்படுகிறது. ஆனால் மத்திய அரசிலிருந்து கிடைக்கும் நிதி மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இந்த நிலைமை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அல்பர்ட்டாவின் உற்பத்தி நிலைத்தன்மை, வருமானம் என்பன கனடாவின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) முக்கிய பங்கினை வகிக்கின்றது.
பெற்றோலியம் மற்றும் கனிம வளங்கள் அடிப்படையாக கொண்டு தனிநாடாக உருவானால் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும் என அல்பேட்டா கருதுகிறது. இதனால்,அல்பர்ட்டா ஏன் கனடா உடன் இணைந்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் அடிக்கடி எழுப்பப்படுகிறது.
நாங்கள் இதிலிருந்து பிரிந்து போகின்ற பிரேரணையை, பொது வாக்கெடுப்பு மூலம் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். 2026ல் அதற்கு போதுமான கையெழுத்து பிரதிகள் சேகரிக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு, பின்னர் நாங்கள் பொது வாக்கெடுப்புக்கு செல்லப் போகிறோம் என்று டேனியல் சிமித் 2025லேயே தடால் புடாலாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு கனடா அரடியலில் பெரும் பேசு பொருளாக இருந்தது. கனடாவிலிருந்து ஒரு நாடு பிரிந்து போகுமா? என்பதான சந்தேகம் பல நாடுகளுக்கும், பல மாநிலங்களின் ஒன்றியங்களாக அமைந்த நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரிய ஒரு நாட்டின் மாநிலம் தனிநாடாக பிரிந்து போனால், மற்ற ஒன்றிய அரசுகளின் ஒற்றுமை கொண்ட மாநிலங்களும் பிரிந்து செல்லும் அபாயம் ஏற்படும் என்று உலக பந்தின் பலநாடுகளுக்கும் பயபீதியும் ஏற்பட்டது.
டேனியல் சிமித் அம்மையார் அவர்களின் அறிவிப்பின் பின்னர், 2026ல் பொது வாக்கெடுப்பு நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டதால், அதற்கு தேவையான கையெழுத்து பிரதிகள் சேகரிக்கப்பட வேண்டும். ஆகவே பல அல்பர்ட்டன்ஸ் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். தங்கள் ஆர்வலர்களாக சென்று கையெழுத்து சேகரித்த அல்பர்ட்டன்ஸ் அதிகமானவர்களை கொண்டு கையெழுத்து சேகரிக்கும் கூடாரங்களை அமைத்து, கையெழுத்து வேட்டைகளையும் நடத்தியிருந்தார்கள். குறிப்பாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களின் கையெழுத்து பிரதிகள் தேவைப்படும். பொது வாக்கெடுப்பு அங்கு சமர்ப்பித்து விவாதிக்கப்பட வேண்டியது காரணமாக, அவர்களும் துரிதமாக செயல்பட்டு கையெழுத்து வேட்டைகள் நடத்தினர். மறுபுறமோ பூர்வீக பழம்குடி வம்சாவழியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 2026 தொடங்கிய இந் நிகழ்வு பெரும் பேசு பொருளாக திகழ்கிறது.
இந்த கொந்தள நிலையில், கனடாவில் ஓர் அமைப்பினால் 2026 பெப்ரவரி கனேடியர்களிடையே ஒரு கருத்தெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில், பிரிந்து போவதற்கு கனடா மக்கள் விருப்பம் தெரிவிக்கிறார்களா என்ற முடிவுகள் 25.02.2026 வெளியாகியுள்ளன.
Angus Reid Institute (ARI) எனப்படும் கனேடிய தன்னார்வலர் அமைப்பு (ARI- Canadian Volunteer Organization), தெரிந்தெடுக்கப்பட்ட கனேடியர்களுக்குள் பொது வாக்கெடுப்பை நடத்தியுள்ளது. இது ஆன்லைன் மூலமாக நடைபெற்று, அல்பர்ட்டா பிரிந்து போவதையும், கியூபெக் மாகாணம் கனடாவை விட்டு பிரிந்து போவதையும் கனடா மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
பிப்ரவரி 2 – 6 வரை 2026, 3000 ற்கும் மேற்பட்ட கனேடியன் குடிமக்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டுள்ளனர். இதில் மொத்தமாக 80% வாக்குகள் கனடாவை விட்டு அந்த மாகாணங்கள் பிரிந்து போகக்கூடாது அவர்கள் எங்களோடு ஒன்றித்து பயணிக்க வேண்டும் என்ற முடிவை வெளிப்படுத்தியுள்ளன.
23.02.2026 அன்று, Angus Reid Institute (ARI)அமைப்பு வாக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் கணக்கெடுப்பின் படி, 71% வாக்களித்தவர்கள் கியூபெக் பிரியக்க கூடாது என்றும், 79%வாக்களித்தவர்கள் அல்பர்ட்டா பிரிந்து போகக்கூடாது என்றும் வாக்களித்திருக்கிறார்கள், இதற்கான கட்டாய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அல்பர்ட்டா விரும்பியோ விரும்பாமலோ,மக்களுக்குள் கருத்து விதைக்கப்பட்டுள்ளது. அதற்கு முதல்வர் பிரீமியர் அவர்களும் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதன் போது, பிரிந்து போக வேண்டும் என்று பல அல்பர்ட்டன்ஸ் ஆக்ரோசமாக நிற்கின்றனர். 2025ஆம் ஆண்டு நடுப்பகுதிகளில் பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள்.
இந்த நிகழ்வின் காரணமாக, Angus Reid Institute (ARI) அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் மொத்தமாக 80%பங்கு பெற்றவர்கள் பிரிந்து போக கூடாது என்று வாக்களித்துள்ளனர்.
மார்க் கார்னி அவர்கள் அல்பர்ட்டா உடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் பற்றிய விவரங்களையும் கவனத்தில் கொண்டு,பிரேரணை பொருளாதார நிலை மற்றும் அரசியல் சூழ்நிலை ஆகியவை மதிப்பீடு செய்யப்படுகின்றன.
டேனியல் சிமித் அம்மையார் தெரிவித்திருப்பதாவது அல்பர்ட்டா பொருளாதாரத்தில் உச்சத்தை அடைந்துள்ளது,கனடாவின் வருவாயில் பெரும்பகுதி அல்பர்ட்டாவினுடையது. இதன் காரணமாக, அதிக முதலீடுகள் மற்றும் எரிபொருள் பைப்லைன்கள் (Fuel Pipelines) நடைமுறைப் படுத்தப்படவுள்ளன. எதிர்கால முதலூடுகள் ஊக்கிவிக்கப்பட்டிருக்குன்றன. இந்த பின்னணியில் தான் ஆகவே அல்பர்ட்டா பிரிந்து போகும் கருத்து மீண்டும் பேசப்படும் முக்கிய செய்தியாக மாறியுள்ளது. கனடாவில் பொது வாக்கெடுப்பு நிறைவேறுமா, பிரியுமா அல்லது பிரியாதா என்பது கனடாவின் இன்றைய பரபரப்பான பொருளாதார நிலை மற்றும் அரசியல் சூழ்நிலைக்குள் எப்படி கையாளப்படப்போகின்றதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கு.மதுசுதன்
B.Sc(Hons),M.Sc
அரசியல் ஆய்வாளர்




















