LOADING

Type to search

இலங்கை அரசியல்

வற் வரியை உள்ளூராட்சி சபைகளிற்கே விடுவிக்குமாறு யாழ். மாநகர விடுத்த கோரிக்கை வட மாகாண ஆளுநரால் நிராகரிக்கப்பட்டுள்ளது?.

Share

ந.லோகதயாளன்.

மத்திய அரசின் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்யும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் சிபார்சின் அடிப்படையில் உள்ளூராட்சி சபை வருமானத்தில் இருந்தே ஊழியர்களின் சம்பளத்தை வழங்க 3 ஆண்டுகளாக நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இதனால் உள்ளூராட்சி சபைகள் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றன. இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை 860 ஊழியர்களின் சம்பளத்தை வழங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றது.

இதனை கருத்தில்கொண்டு உள்ளூராட்சி சபை மூலம் மத்திய அரசிற்கு கிடைக்கும் வற் வரியை சபைகளிற்கே விடுவிக்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபை ஓர் தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கு உரிய தீர்வை பெற்றுத் தருமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு எழுத்தில் விண்ணப்பித்திருந்தனர்.

இத்த கோரிக்கையை பரிசீலித்த ஆளுநர் “பெறுமதி சேர் வரி விலக்கானது தேசிய ரீதியான கொள்கைத் தீர்மானத்திற்கு உட்பட்டதாக அமைந்துள்ளமையால் சாதகமாக பரிசீலிக்கப்படவில்லை” என ஆளுநரின் செயலாளர் ஒப்பமிட்டு மாநகர சபைக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.