மார்க்கம் நகரில் தனது இரண்டாவது கிளையை திறந்து வைத்த ஸ்காபுறோ HiFi Barbershop தொழிலகம்!
Share
ஸ்காபுறோ நகரில் மார்க்கம்- மெக்னிக்கல் வீதி சந்திப்புக்கு அருகில் தனது தலைமைத் தொழிலகத்தை சிறப்பாக நடத்திவரும் HiFi Barbershop தொழிலகத்தார் தமது இரண்டாவது கிளையை மார்க்கம் நகரில் 8 Shadlock Street Unit 4, Markham (Steels/Shadlock) என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கட்டடத்தில் கடந்த22ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக திறந்து வைத்தனர்.
அன்றைய தினம் ஒன்றாரியோ மாகாணத்தின் சுகாதார அமைச்சின் இணையமைச்சரான விஜேய் தணிகாசலம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொழிலகக் கிளையை திறந்து வைத்தார்.
பல ஊடக நண்பர்கள் மற்றும் வர்த்தக நண்பர்கள் என பலரும் கலநது கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து சென்றனர்.
புதிய கிளையின் தொலைபேசி இல்ககம்: 437 243 1719 ஆகும்!
படங்கள்: ரவி அச்சுதன்
























