LOADING

Type to search

சினிமா

பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘அன்பே டயா​னா’

Share

‘ஜமா’ பட புகழ் பாரி இளவழகன் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். படத்தின் முக்கிய சிறப்பம்சமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவருடன் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பேமிலி என்டர்டெயின்ராக உருவாகியுள்ளது. இந்நிலையில், பாரி இளவழகன் இயக்​கி, நடிக்​கும் படத்​துக்கு ‘அன்பே டயா​னா’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. இப்படம் வருகிற கோடைவிடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.