மட்டக்களப்பில் 18 பேருக்கு டெங்கு நோய் காரணமாக வீடுகள் மற்றும் காணிகளை சுத்தம் செய்யுமாறு வைத்திய அதிகாரி கோரிக்கை
Share
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் சிக்கன் கூனியா நோய் தாக்குத்துக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே பொதுமக்கள் வீடுகள் மற்றும் தமது காணி வெற்று காணிகளை துப்பரவு செய்யுமாறு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பணிப்பாளர் வைத்தியர் இளைதம்பி உதயகுமார் கேரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு நகர்பகுதியில் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளான கொக்குவில் மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் உள்ள வீடுகளை சோதனையிடும் நடவடிக்கை ஒன்றை 5ம் திகதி அன்று வியாழக்கிழமை (5) மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் மற்றும் மாநகரசபை, கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் ஒன்றினைந்து மேற்கொண்டனர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பணிப்பாளர் வைத்தியர் உதயகுமார் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழை பெய்த காரணமாக காரணமாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளது
இதற்கமைய கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் ஒவ்வொரு நாளும் 3 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றதுடன் கொக்குவில் பிரதேசத்தில் 12 டெங்கு நோயாளர்களும் கோட்டமுனை பகுதியில் 6 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனா.;
எனவே கண்டுபிடிக்கப்பட்ட நோய்; தாக்கத்துக்கு உள்ளானவர்களின் பகுதிகளில் டெங்கு நுளம்பு குடம்பிகளை அகற்றும் பணியை முன்னெடுக்கும் நடவடிக்கை ஒன்றை எடுத்து வருகின்றோம்;.
இதனால் நோய் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரக் கூடியதாக இருக்கின்றது இருந்தாலும் பொது மக்கள் தங்களது வீடுகள், காணிகள் மற்றும் பராமரிப்பு இல்லாமல் உள்ள வெற்றுக் காணிகள் மற்றும் தொடர்ந்து பூட்டியுள்ள வீடுகளின் உரிமையாளர்கள் உடனடியாக டெங்கு நுளம்பு பரவும் இடங்களை துப்பரவு செய்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
;
அவ்வாறு ஒத்துழைப்பதன் மூலம் டெங்கு நுளம்பை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரமுடியும் என்பதுடன் சிக்கன் கூனியா நோயாளர்களும் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளனர் அதுவும் நுளம்பால் பரவக் கூடியது என்றார்.




















