LOADING

Type to search

இந்திய அரசியல்

தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும் – விஜய் அறிவிப்பு

Share

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மகளிர் தின விழா மாமல்லபுரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறர். விஜய் கூறியதவாது: தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயது வரை உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு மட்டும் இதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படும். அன்னபூரணி திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணம் இன்றி வழங்கப்படும் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணம் ஆகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், தரமான பட்டுப்புடவை வழங்கப்படும். கல்வி இடைநிற்றலை தடுக்க ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் பொருளாதர நிதி வழங்கப்படும். அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பேருந்து பயணம் வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயனிக்கலாம்” இவ்வாறு அவர் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.