LOADING

Type to search

உலக அரசியல்

ஈரான் போர்: டொனால்டு டிரம்ப் – விளாடிமிர் புதின் பேச்சுவார்த்தை

Share

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேவேளை, ஈரான் புதிய உச்சதலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மோஜ்தபா கமேனி ஈரான் உச்சதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வரவேற்றுள்ளார். மேலும், ஈரானுக்கு ரஷியா துணைநிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 1 மணிநேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் போர், உக்ரைன் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை வெளிப்படையாகவும், நேர்மறை தன்மையுடனும் இருந்ததாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.