LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்தமெய்வல்லுனர் போட்டி!

Share

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது 9ம் திகதி திங்கட்கிழமை அஅன்றையதினம் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது.

ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு, அணிநடையுடன் போட்டி ஆரம்பமானது. தொடர்ந்து சுவட்டு நிகழ்வுகள், இடைவேளை நிகழ்வு, பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.

கல்லூரியின் முதல்வர் ரி.வரதன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனான வைத்தியர் ரி.நந்தகுமார் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் – ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.