LOADING

Type to search

இலங்கை அரசியல்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தில் நேர்ந்த துயரம்!

Share

12ம் திகதி வியாழ்ன் அன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் வாடகை முச்சக்கர வண்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது முச்சக்கர வண்டியானது மீண்டும் யாழ்ப்பாண பக்கம்நோக்கி திருப்புவதற்கு முயற்சித்தது. இந்த சந்தர்ப்பத்தில் பின்னால் வந்து கார் குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து சம்பவித்தது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, பிரான்ஸ் தம்பதிகள் இருவர் மற்றும் காரின் சாரதி என நால்வர் படுகாயம் அடைந்தனர். அத்துடன் முச்சக்கர வண்டி மற்றும் கார் என்பன பலத்த சேதங்களுக்கு உள்ளாகின.

படுகாயம் அடைந்த நால்வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து ஊர்காவல்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.