LOADING

Type to search

உலக அரசியல்

நெதன்யாகு உடல் நிலை பற்றிய வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல்

Share

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் தகவல்கள் பரவி வருகின்றன. இதில், சமூக ஊடகத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் நெதன்யாகு போன்ற தோற்றம் கொண்ட நபர் ஒருவர் காயத்துடன், இடிபாடுகளுக்கு இடையே காணப்படுகிறார். அவருக்கு வீரர்கள் உதவிடும் காட்சி பதிவாகி உள்ளது. இதனால் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டாரா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் அதிகம் எழுந்தது. இந்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு உடல்நிலை குறித்து பரப்பப்படும் தகவலை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து ஏஐ வீடியோ பரப்பப்படுவதாகவும், அவர் நல்ல உடல் நலனுடன் இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.