LOADING

Type to search

இந்திய அரசியல்

ஞானபீட விருது பெற்ற வைரமுத்துவை சந்தித்து பாராட்டிய மு.க.ஸ்டாலின்

Share

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் மிகச் சிறந்த விருதான ஞானபீட விருது வழங்கப்படுகிறது. சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது என்று இலக்கியத் துறையினர் கொண்டாடி வருகிறார்கள். பலதுறை தலைவர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். தற்போது தமிழகத்திலிருந்து மூன்றாவது கவிஞராக ஞானபீட விருதினை வைரமுத்து பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து பொன்னாடை போற்றி ஞான பீட விருது பெற்றதுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.