கனடாவில் ஒரு மாதத்தில் சுமார் 84,000 பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்!
Share
“பொருளாதார பாதிப்பு மற்றும் வேலையற்றோர் வீதம் சடுதியாக உயர்வு”

கனடாவில் தற்போது வெளிவந்த ஒரு மிக முக்கியமான புள்ளிவிபரம் சமூக மற்றும் பொருளாதாரத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் ” Statistics Canada”எனப்படும் கனடாவின் புள்ளிவிவரத் திணைக்களத்தின் அறிக்கையிலிருந்து வெளியாகியுள்ளது. குறிப்பாக பெப்ரவரி மாதத்திற்கான தரவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன,அதிலும் பெரும் வேலைவாய்ப்புக் குறைபாடுகளைப் பற்றிய விவரங்கள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.
அறிக்கையின் படி, பெப்ரவரி மாதத்தில் மட்டும் கனடா பூராகவும் சுமார் 84,000 வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கனடாவின் முழு நிலவரத்திலும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இழந்த வேலைகளில் முழுநேர (full-time) வேலைகள் அதிகளவில் உள்ளன. அதேவேளை பகுதி நேர (part-time) வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பாதிக்கப்பட்டோர் 25 முதல் 55 வயதுவரையிலான வேலை செய்யக் கூடிய வயது கொண்டோர் ஆகும்.
இதனால் Unemployment Rate அல்லது வேலைவாய்ப்பு இல்லாத வீதம் கடுமையாக உயர்ந்துள்ளது.
பெப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் 6.5% இருந்த வீதம், பெப்ரவரி முடிவில் 6.7% ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு பெப்ரவரியில் இழக்கப்பட்ட 84,000 வேலை வாய்ப்புகளின் விளைவாக நிகழ்ந்துள்ளது.
இதன் மூலம், கனடாவில் பெப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட வேலை வாய்ப்புக்குறைபாடு மிக கவலைக்குரிய நிலைமையை உருவாக்கியுள்ளது. முழுநேர வேலைகள் மிக அதிக அளவில் இழக்கப்பட்டதால், பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள், வேலை தேடுபவர்களுக்கு நேரடி தாக்கத்தை உண்டுபண்ணும். இந்த வேலை இழப்புக்கள் நாட்டின் பொருளாதார ஸிதிரமற்ற தன்மைக்கான சமிஞ்ஞை ஆகும்.
கனடாவில் பெப்ரவரி மாத புள்ளிவிவரங்கள் வேலைவாய்ப்பு கனடாவின் வெலைச் சந்தையின் நிலைமையின் கடுமையை வெளிப்படுத்தியுள்ளது. Unemployment Rate உயர்ந்திருப்பதால் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக திடீரென வேலை இழந்தவர்கள் வாழ்க்கைச் செலவுகளை, மாதாந்த செலவுகளை, வாடகை மற்றும் கடன் சுமைகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இது கனடாவில் பெரும் கவலையை ஏற்படுத்தும் ஒரு முக்கிய விடயமாகும்.
சிறிய வயது முதல் இளைஞர்களுக்கு கூட வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. 15–24 வயதுடைய இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். இதன் மூலம் மொத்தமாக ஜனவரி மாதத்தில் 6.5% இருந்த கனடாவின் Unemployment Rate பெப்ரவரி மாதத்தில் 6.7% ஆக உயர்ந்துள்ளது.
இது முன்னர் கொரோனா காலத்தின் உயர்ந்ததன் பின் உலுயர்ந்தவ்வேலையின்மை வீதத்திற்கு பின்னான அதிக உயர்வாகும். புள்ளிவிவரங்கள் இதை தெளிவாக காட்டுகின்றன.
வேலை இழந்தவர்கள் பெரும்பாலும் பொருட்கள் சேவைகள் (Goods & Services), மொத்த விற்பனை நிலையங்(Wholesale), கட்டுமானத் துறை (Construction) மற்றும் உற்பத்தி துறை(Manufacture) துறைகளில் பணியாற்றியவர்களே அதிகம் உள்ளடங்குகின்றனர்.
குறிப்பாக:
● Wholesale துறையில் 18,000 பேரின் முழுநேர வேலைகள் இழக்கப்பட்டுள்ளன.
● Construction துறையில் 12,000 பேரின் வேலைகள் முற்றிலும் பறை போயுள்ளன.
● Manufacturing துறையில் 9,200 பேரின் வேலைகள் இழந்துள்ளனர்.
இந்த வேலைகள் பெரும்பாலும் முழுநேர(full-time) வேலைகள், குடும்பத்தாரின் வாழ்வாதாரத்துக்கு முக்கியமானவை. வேலை இழந்தவர்கள் குடும்ப மாதாந்த செலவுகளை, கடன்கள் மற்றும் வாடகைகளை சமாளிக்க சிரமப்பட்டு வருகின்றனர். இது கனடாவில் பொருளாதார அமைப்பில் மிகப் பெரிய சவாலை உருவாக்கியுள்ளது.
கனடாவில் பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட வேலைவாய்ப்புக் குறைபாடு குடும்பங்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதத்தில் 84,000 வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டதால், பல குடும்பங்கள் வாழ்க்கைச் செலவுகள், வாடகை, கடன், மாதாந்த செலவுகள் போன்றவற்றை சமாளிக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, வாழ்க்கை சுமை அதிகரித்து, வாழ்வாதார நிலை மோசமாகும் அபாயம் உருவாகியுள்ளது.
வாழ்க்கச் செலவு , நெருக்கடி காரணமாக பல புத்திஜீவிஜள் நாட்டை விட்டு வெளிதேறிவிட்டனர், வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றனர். குறிப்பாக வைத்தியர்கள்(Doctors), n பொறியிலளாளர்கள்(Engineers), ஆராய்சியாளர்கள்(Researchers), தாதிகள்( Nurses) போன்ற திறமையுள்ள நபர்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் நாட்டில் மூளை பற்றாக்குறை (Brain Drain) நிகழ்ந்துள்ளது. இதன் விளைவாக கனடா குடிவரவு குடியகல்வு அமைச்சர் முன்னரே 33,000 திறமையுள்ள நபர்களுக்கு உடனடியாக Permanent Residency வழங்க மார்ச் மாத அறிவுப்புக்கள் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளது, அவர்களை நாட்டில் நிலைத்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், Bank of Canada மற்றும் Canada Statistics அறிக்கைகள் பெப்ரவரி மாத Employment Rate குறைந்திருப்பதை உறுதி செய்கின்றன.Full-time வேலைகள் குறைவதால், வேலையற்றோர் வீதம்(unemployment Rate) 6.5% இருந்து 6.7% ஆக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான நிறுவனங்கள்,குறிப்பாக Wholesale, Construction, Manufacturing துறைகளில், உற்பத்தி செலவு அதிகரித்ததால், லாபமின்றி மூடப்பட்டிருக்கின்றன.
இந்த நிலைமை சமீபத்திய அமெரிக்கா, ஈரான் போர் மற்றும் பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மேலும் தீவிரமாகிறது. இதன் மூலம், பொருளாதார பாதிப்பு பெரும்பாலும் வேலை இழந்தவர்களுக்கு நேரடியாக ஏற்பட்டு, நாட்டின் பொருளாதார நிலை மோசமாகி வருகிறது. இந்த அனைத்து காரணங்களும் இனி வேலையற்றோர் வீதத்தினை (unEmployment Rate) இன்னும் உயர்வுக்கு இட்டுச்செல்லலாம்.
வளைகுடா பதற்ற நிலை இன்னும் மோடமானால் எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் நிகழும் போத்கும் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது உற்பத்தி செலவுகள் அதிகரித்தால் சில உற்பத்தி நிறுவனங்கள் மட்டுபடலாம் அல்லது மூடலாம். இதனால் இன்னும் இழக்கப்படும் வேலைகள் அதிகமாக இருக்கும்.
பலர், வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் நாட்டை விட்டு வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றனர். இது ஒரு தேசிய மற்றும் உலகளாவிய பொருளாதார சவால் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்கவும் அவசியம் உள்ளது.
ஆக அமெரிக்க வரி விதிப்புக்களுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலை, பொருளாதார மந்த நிலை என்பன கனடா தொழில்துறையில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளன. என்னதான் கனடா பிரதமர் ஓடி ஓடி சீனா, இந்தியா, யப்பான்,அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் என சென்றுப்பல வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டாலும் அவை உடனடி விளைவுகளை பொருளாதார முன்னேற்றங்களை உண்டுபண்ணப்போவதில்லை, எனவே அமெரிக்காவுடனான வரிச்சிக்கல்கள், அதிகரித்துவரும் போர்பதற்றங்கள் எனபன ஒருசேர இன்னும் கனடா பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் இன்னும் வேலைஇழப்புக்கள் ஏற்படலாம் என்பதை தான் கோடிட்டு காட்டி நிற்கின்றன.
கு.மதுசுதன்
B.Sc(Hons),M.Sc
அரசியல் ஆய்வாளர்




















