LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் கடன் தொல்லை காரணமாக இளைஞர் உயிர்மாய்ப்பு!

Share

பு.கஜிந்தன்

16ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் கடன் தொல்லை காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். பட்டினசபை வீதி, சங்கானை என்ற முகவரியைச் சேர்ந்த தியாகராஜா கிந்துஜன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் சுருக்கிட்டு தூக்கில் தொங்கி உயிர்மாய்த்துள்ளார்.

பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது