ஈழநாடு பத்திரிகை விடுக்கும் முக்கிய அறிவித்தல்!
Share
21 மார்ச் 2026. சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகை யின் 33வது ஆண்டு விழாவில் தாயகத்து வேர்களும் கனடிய விழுதுகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற ஈழத்தின் தலைசிறந்த பேச்சாளர் தமிழருவி சிவகுமாரன் அவர்களும்
ஏழிசைக்கீதங்கள் இசை நிகழ்வுக்காக தமிழகத்தின் பிரபல திரைப்படப் பாடகரும் கர்நாடக இசைக் கலைஞருமான சத்தியப் பிரகாஷ் அவர்களும் கனடாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
அதேவேளை விழாவில் கலந்து கொள்ள விருப்பம் கொண்டுள்ள எங்கள் வாசகர்களாகிய சில வயோதிபர்களும் வசதி வாய்ப்புக் குறைந்த அன்பர்களும் முன் வைத்த அன்பான வேண்டுகோளை கருத்தில் கொண்டு ஈழநாடு பத்திரிகை நிறுவனம் ஒரு சிறப்பு வசதியை வழங்க தீர்மானித்துள்ளது.அதன்படி விழா ஆரம்பமாகவுள்ள மாலை 5.30 மணிக்கு முன்னர் வருகை தரும் பெரியோர்களுக்கும் முதியோர்களுக்கும் 100 டொலர் அனுமதிச் சீட்டு 75.00 டொலராகவும் 50.00 டொலர் அனுமதிச் சீட்டு 35.00 டொலராகவும் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு ள்ளது.
எனவே விழாவில் கலந்து கொண்டு தங்களின் மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர விரும்பும் பெரியோர்கள் முதியோர்கள் தயவு செய்து உங்கள் வருகையை கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அன்போடும் பணிவோடும் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
T.K பரமேஸ்வரன் – ஆசிரியர் ஈழநாடு
தொடர்புகளுக்கு:- 416 841 9600




















