“கார்மேனி செல்வம்” படத்தின் “குறு குறு” பாடல் வெளியானது
Share
இயக்குநர் ராம் சக்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள கார்மேனி செல்வம் எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி , கவுதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திர மௌலி, ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார். ராகவ் ரமேஷ் இசையமைத்துள்ளார். இது பயணத்தைப் பற்றிய படைப்பு என்பதும், இதில் ‘சில பயணங்கள் உங்களை வெகு தூரம் அழைத்துச் செல்லும். மற்றவை உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்’ என்ற வாசகத்தை இடம்பெறச் செய்திருப்பதால் மறக்க இயலாத – மறக்க முடியாத பயண அனுபவத்தை இப்படைப்பு விவரிப்பதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. இதுவே படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்கிறது. இந்நிலையில், ‘கார்மேனி செல்வம்’ படத்தின் ‘குறு குறு’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை மணி அமுதவன் வரிகளில் சின்ன பொண்ணு, அந்தோணி தாசன் இணைந்து பாடியுள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகிறது.















