இலங்கை விஜயம் செய்துள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மர்ஷா இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபன நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தலைமையிலான குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடினார்
Share
ந.லோகதயாளன்.
இலங்கை வருகைதந்த ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மர்ஷா குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யா சம்மதித்துள்ளது.
ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மர்ஷா குழுவினர் 26 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை சென்றடைந்தனர்.
இவ்வாறு சென்றிருந்த ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மர்ஷா தலைமையுலான குழுவினரை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பின் நிறைவிலேயே ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மர்ஷா குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யா சம்மதித்துள்ளது என்ற தகவலைத் தெரிவித்துள்ளார்.















