விஜய்சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” தொடரில் விஜே பார்வதி
Share
விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் இதைத் தயாரித்துள்ளார். இத்தொடரில் மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், நடிகர்கள் சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சமீபத்தில் ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரின் முன்னோட்டம் வெளியானது. இந்த நிலையில், முத்து என்கிற காட்டான் என்ற இணையத் தொடரில் பிக் பாஸ் பிரபலம் விஜே பார்வதி நடிக்கும் பாத்திரத்தின் பதாகையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொடரில் லலிதா என்ற பாத்திரத்தில் விஜே பார்வதி நடிக்கிறார். இந்த பதாகை இணையத்தில் வைரலாகி வருவதுடன், விஜே பார்வதியின் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடர் வரும் மார்ச் 27 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.















