“ஹாப்பி ராஜ்” படக்குழுவுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டு.
Share
ஜிவி பிரகாஷ் ‘ஹாப்பி ராஜ்’ படம் நேற்று வெளியானது. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இதில் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை கெளரி பிரியா நடித்துள்ளார். இந்நிலையில், ‘ஹாப்பி ராஜ்’ படத்தை பாராட்டி இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “‘ஹாப்பி ராஜ்’ மூலம் நல்ல கதைக்குள் ஒரு அணிலை போல துள்ளி குதித்திருக்கிறார் ஜி.வி பிரகாஷ். ‘குதிரைமுட்டை’ என்ற கேலி வார்த்தையையும் அதன் வலியையும் ஏற்று நடித்திருந்த ஜார்ஜ் மரியனின் இருப்பும் சிரிப்பும் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. வெறும் கொண்டாட்டமும் குதூகலமும் மட்டுமே நிரப்பப்பட்டு வருகிற இன்னொரு சினிமாவாக இருக்கும் என்ற என் எண்ணத்தை உடைத்து நொறுக்கிய உணர்ச்சிமிக்க படைப்பாகவும் இருந்தது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.















