LOADING

Type to search

சினிமா

மம்மூட்டி – மோகன்லால் நடித்துள்ள ‘பேட்ரியாட்’ படத்தின் முன்னோட்டம் 4ம் தேதி வெளியீடு

Share

மலையாள திரையுலகின் ஜாம்பவான்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள படம் ‘பேட்ரியாட்’ . மகேஷ் நாராயணன் இயக்கி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த நிலையில், ‘பேட்ரியாட்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தின் முன்னோட்டம் நாளை மாலை 6 மணியளவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கவிதா திரையரங்கில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மேலும் அங்கே வாருங்கள்… ஏனெனில் நானும் அங்கே இருப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார். இரு பெரும் நடிகர்களும் வருகைதர உள்ளதால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.