LOADING

Type to search

கனடா அரசியல்

‘மண்ணின் மணமும் மங்கையர் நினைவுகளும்’ நூலின் பிரதி ‘சுருவில்’ கிராமத்தின் பிரமுகரும் அரசியல் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவருமான கி. திருவருளிடம் கையளிக்கப்பெற்றது

Share

கடந்த 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் ஈற்றோபிக்கோ நகரில் ‘கிராமத்துவதனம்’ ஒன்றாரியோ தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ‘அனைத்துலக பெண்கள் தினம்’ கொண்டாடப்பெற்றது.

அங்கு கனடா வாழ் 62 தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள். தமது ‘பிறந்த பதி’ அல்லது ‘புகுந்த பதி’ பற்றி எழுதிய 62 சிறப்பான கட்டுரைகள் அடங்கிய ‘மண்ணின் மணமும் மங்கையர் நினைவுகளும்’ என்ற பெயர்கொண்ட தொகுப்பு நூல் வெளியிடப்பெற்றது.

இங்கே காணப்பெறும் படத்தில் யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள ‘சுருவில்’ என்னும் வளங்கள் நிறைந்த கரையோரக் கிராமத்தில் பிறந்த திருமதி பத்மா லோகேந்திரலிங்கம் தனது ‘பிறந்தபதி’ பற்றி எழுதிய கட்டுரையும் ‘மண்ணின் மணமும் மங்கையர் நினைவுகளும்’ நூலில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி நூலின் பிரதியொன்றை மேற்படி சுருவில் கிராமத்தில் பிறந்த கனடா வாழ் அன்பரும் தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட கிருஸ்ணபிள்ளை திருவருள் அவர்களிடம் கையளிப்பதை இங்குள்ள படத்தில் காணலாம்.