LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி திருச்சடங்கு ஆராதனை.

Share

மன்னார் நிருபர்

(04-04-2026)

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்ததை நினைவுபடுத்தும் கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான துக்க மற்றும் தியாக நாளாக புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது

இந்நாளில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், சிலுவைப்பாதை மற்றும் பாடுகளைத் தியானித்தல் போன்றவை நடைபெற்றது.

இந்நிலையில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சடங்கு ஆராதனை திருப்பலி இயேசு ஆண்டவரின் இறப்பை குறிக்கும் வகையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டாக இடம் பெற்றது.

இயேசுவின் இறப்பை குறிக்கும் வகையில் ஆலயத்தின் அனைத்து திருச்சுரூபங்களும் திரையினால் மூடப்பட்டிருந்தது. இயேசுவின் பாடுகளை குறிக்கும் முகமாக ஆராதனை திருப்பலி வழி பாடுகளில் குருக்கள் சிவப்பு ஆடை அணிந்து இருந்தனர்.

இயேசுவின் திருச்சிலுவை பீடத்திற்கு கொண்டுவரப்பட்டு பீடத்தில் ஆயர் ,குருக்கள், அருட் சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் சிலுவை முத்தி ஆராதனையில் ஈடுபட்டனர்.

பெரிய வெள்ளி ஆராதனை திருப்பலியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.